1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (10:50 IST)

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!

anvar raja
அதிமுகவிலிருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் எம்பிஏ அன்வர் ராஜா மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.  
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வெளியேறியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அன்வர் ராஜா இணைந்துள்ளதாக தெரிகிறது. 
 
அதிமுகவில் மீண்டும் இணைந்த பின்னர் முன்னாள் எம் பி அன்வர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு அதிமுகவில் இணைந்து உள்ளேன் என்றும் கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.  
 
மேலும் அவர் எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை என்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva