செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (08:20 IST)

கருப்பர் நகரம் படத்தில் இருந்து விலகிய இயக்குனர் அறம் கோபி!

நடிகை நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பார்த்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் தொடர்ச்சியாக அறம் 2 இயக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது. இதில் நயன்தாராவே நடிப்பதாவும் கூறப்பட்டது

இதையடுத்து ஜெய்யை வைத்து  கருப்பர் நகரம் என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார். ஆனால் அந்த படம் என்ன ஆனது என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது ஆண்ட்ரியாவை வைத்து மனுஷி என்ற படத்தை இயக்கி வருகிறார். அதை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் கருப்பர் நகரம் படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் பற்றி இயக்குனர் அறம் கோபி எந்த பதிவையும் பகிரவில்லை. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு தரப்புக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 90 சதவீதம் பணிகளை முடித்த நிலையிலேயே அவர் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.