திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (20:09 IST)

நயன்தாராவின் 'அன்னப்பூரணி' பட முதல் சிங்கில்' 'ரிலீஸ்

annapoorani -nayanthara
நயன்தாரா 75 வது படமான  'அன்னப்பூரணி' படத்தின் முதல் சிங்கில்' உலகை வெல்லப் போகிறாள் ' வெளியாகியுள்ளது.
 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.  இவர் நடித்துள்ள படம் அனனப்பூரணி. இந்த படத்தில் ஹீரோவாக  ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். 

சமீபத்தில் ஜீ ஸ்டுடியோ நிறுவனம்,  நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னப்பூரணி படம்  வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகும் என தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னப்பூரணி படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்த  நிலையில் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம்  உலகை வெல்லப் போகிறாள் என்ற பாடலை ரிலீஸ் செய்துள்ளது. இப்பாடல் சரிகம யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.  இப்பாடலை ஹரிணி பாடியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ளார். விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

நடிகை நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.