1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:19 IST)

ஜப்பானில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஜிவி பிரகாஷ் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஈடாக  பரபரப்பான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். 
 
இவர் தற்போது ஐங்கரன், அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ரெட்டைக் கொம்பு, வசந்தபாலனின் ஜெயில், ஏ.எல்.விஜய்யின் வாட்ச்மேன், என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சர்வம் தாள மயம் திரைப்படத்தைத் தவிர்த்து மற்ற எல்லா திரைப்படங்களுக்கும் இசையமைப்பதும் இவரே தான். இதனிடையில் நடிகர் சூர்யா, சுதா கொங்கரா படத்திற்கும் இசையமைத்துவருகிறார். 
 
மேற்கூறிய படங்களில் சர்வம் தாள மயம் திரைப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜிவ்மேனன் இயக்குகிறார். ஒரு மியூஸிக்கல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இதற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்படம் டோக்கியோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.