வெளிநாடுகளில் சாதனைப் படைக்கும் அண்ணாத்த ரிலீஸ்!
அண்ணாத்த திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 1100 திரைகளில் வெளியாகி சாதனைப் படைக்கிறது.
ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது. தீபாவளியை முன்னிட்டு நான்காம் தேதி வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு இப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சாதனையைப் படைத்துள்ளது அண்ணாத்த. ஒட்டுமொத்தமாக இதுவரை 1100 திரைகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுவரை எந்த ஒரு தமிழ் படத்துக்கும் நிகழாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது.