செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:45 IST)

எதற்கும் துணிந்தவன் … க்ளீன் ஷேவ் செய்து கெட்டப் மாற்றிய சூர்யா!

நீளமான முடி, தாடி மற்றும் மீசையோடு இருந்த நடிகர் சூர்யா இப்போது தன்னுடைய வழக்கமான க்ளின் ஷேவ் லுக்குக்கு மாறியுள்ளார்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் தினம் வெளியானது.

கிட்டத்தட்ட பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் இரு பாடல்களும் சில காட்சிகளும் மட்டுமெ படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கான தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் சூர்யா.