திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:00 IST)

குஷ்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அண்ணாமலை

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர்,  சின்னத்தம்பி, சிங்காரவேலன்,  அண்ணாமலை, வில்லு,  நாட்டாமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தியதுடன், சீரியலும் தடம் பதித்து சாதித்தார். அதன்பின்னர், அரசிலில்  திமுகவில் இருந்து விலகி, காங்கிரஸ் நீண்ட காலம் செயல்பட்டு வந்த நிலையில், பாஜகவில் இணைந்தார்.

தற்போது சினிமாவில் நடித்து வருவதுடன்,  பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

இன்று நடிகை குஷ்பு 53 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் சமூக வலைதள பக்கத்தில்,
‘’தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும்,  தேசிய செயற்குழு உறுப்பினருமான சகோதரி திருமதி குஷ்பு சுந்தர் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரி  குஷ்பு சுந்தர் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.