வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (11:53 IST)

தனது காதலி குறித்து முதன்முறையாக ஓபன் டாக் செய்த அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் தனது காதலி குறித்து முதன்முறையாக பேசியுள்ளார்.


 
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது வளர்ந்து வரும் இசை கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். 
 
திறமை ஒரு பக்கம் இருந்தாலும் இவருக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய லக் என்னவென்றல்,  சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது தான் அதனால் தான் இவருக்கு பேட்ட படத்தில் கூட இசையமைப்பாளராகும் வாய்ப்பு மிக எளிதாக கிடைத்தது . பல நடிகைகளோடு கிசு கிசுக்கப்பட்ட அனிருத்தை சினிமாத்துறையில் இருக்கும் அவரது நண்பர்கள் கூட பிலே பாய் என்று சொல்லி கிண்டலடிப்பார்கள். 
 
இதெல்லாம் சரி இப்போது 28 வயதாகும் அனிருத்துக்கு காதலி இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகத்தோடு அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்னது இது தான், நான்  ரொம்ப நாளாகவே சிங்கிளாக தான் கிடக்குறேன், இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு ஒரு பெண்ணை  காதலித்தேன். ஆனால் இப்போது இருக்குற வேலையில் காதலிப்பதற்கு நேரமே இல்லை,  அதற்காக இப்படியே இருந்திட  மாட்டேன் விரைவில் கமிட் ஆகிவிடுவேன் என்று சிரித்தபடியே கூறினார்.