திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:54 IST)

ரஜினி வீட்டு கல்யாணத்தில் இரண்டே இரண்டு இளம் நடிகைகள்! யாருன்னு தெரியுமா?

ரஜினி மகள் சவுந்தர்யாவின்  திருமணத்தில் பங்கேற்ற இரண்டு இளம் நடிகைகள் பலரின் சந்தேகங்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளனர். 


 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் இரண்டாவது திருமணம் இன்று (பிப்ரவரி 11) சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் கலந்துக்கொண்டனர். 
 
விழாக்கோலம் போன்று வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்களும் விடீயோக்களும் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், திருமண வரவேற்பில் ரஜினி நடனமாடிய வீடியோ மற்றும் மகன் தேவுடன் சவுந்தர்யா இருக்கும் புகைப்படம் போன்றவை சமூக வளைத்தளத்தில் தீயாக பரவியது. 
 
பல மூத்த நடிகர்,  நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய இத்திருமணத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஆன்ட்ரியா , மஞ்சிமாமோகன் என இரண்டு இளம் நடிகைகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த முன்னணி இளம் நடிகைகளும் பங்குகொள்ளாத இத்திருமணத்தில் இவர்கள் இருவருக்கும் மட்டும் ஏன் இந்த ஸ்பெஷல் அழைப்பு என கோடம்பாக்கத்தில் பலர் கிசுகிசுக்க  பிறகு ரஜினி வீட்டு திருமணத்தின்  ஹாட் டாபிக் ஆக பேசப்பட்டு வருகிறது.


 
அதாவது, நடிகை ஆன்ட்ரியா அனிருத்துடன் இருக்கும் நெருங்கிய புகைப்படங்கள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. அதேபோன்று நடிகை மஞ்சிமா மோகன் அனிருத்தின் உறவினரான ஹ்ரிஷிகேஸ் என்பருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஹ்ரிஷிகேஸ் வேலையில்லா பட்டதாரி படத்தில்  தனுஷிற்கு தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவர்கள் இருவரும் ரஜினி வீட்டு கல்யாணத்தில் பங்கேற்றுள்ளதால் ஒருவேளை இவர்களும் கூடியவிரைவில் ரஜினி குடும்பத்தில் இணையவிருக்கிறார்களோ என்று பேசப்பட்டு வருகிறது.