வாடிவாசலில் சூர்யாவுக்கு ஜோடி இவர்தான்… வெற்றிமாறனின் சூப்பர் சாய்ஸ்!
வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தை அடுத்து அவர் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். வாடிவாசல் என்ற பெயரில் சி சு செல்லப்பா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க அவர் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.