வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (15:40 IST)

குட்டிப் பொண்ணா பாத்தது… இவ்ளோ பெரிய பொண்ணாகிட்டாங்களா? கிளாமராக போட்டோ வெளியிட்ட குழந்தை நட்சத்திரம்!

ஜில்லுன்னு ஒரு காதல் புகழ் ஸ்ரேயா சர்மா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

சூர்யா மற்றும் ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ஜில்லுனு ஒரு காதல். அந்த படத்துக்குப் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. தனது குறும்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இவர் இடம் பிடித்தார். அதன் பின்னர் சில படங்களில் நடித்த அவர் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில் இப்போது இவர் வளர்ந்து வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ளார். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் பலர் குழந்தையாக இருந்தவரா இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டார் என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் உங்களை சினிமாவில் பார்க்கலாம் போலயெ என்ற கமெண்ட்களில் கூறிவருகின்றனர்.