வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:17 IST)

முன்பதிவில் கலக்கும் பிரசாந்தின் அந்தகன்… ஸ்பெஷல் ஷோவெல்லாம் உண்டாம்!

பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ‘அந்தாதூன்’ என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்பி எதிர்பார்த்திருக்கிறார்.

அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்துக்காக பல கட்டமாக ப்ரமோஷன் பணிகளை பிரசாந்த் மேற்கொண்டுள்ளார். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாம். அந்தகன் படத்துக்கு முன்பதிவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதாம். சென்னை ரோகினி திரையரங்கில் இந்த படத்துக்கு ஸ்பெஷல் ஷோவெல்லாம் போட்டு அதற்கு டிக்கெட் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அதனால் அந்தகன் படம் வெற்றிபெற நல்ல வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.