அந்தாதூன் தமிழ் ரீமேக் தலைப்பு இதுதான்? வெளியான ரகசியம்!
அந்தாதூன் தமிழ் ரீமேக்குக்கு எம்ஜிஆர் பட பாடல் ஒன்றை தலைப்பாக வைக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருந்தார். ஆனால் லூசிபர் படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்ததால் அதில் இருந்து விலகினார். இதையடுத்து பொன்மகள் வந்தாள் புகழ் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரசாந்தோடு கார்த்திக் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது படக்குழு. மேலும் புத்தாண்டு அன்று படத்தின் தலைப்பையும் அறிவிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு எம்ஜிஆர் பாடல் ஒன்றின் வரிகள்தான் தலைப்பாக வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கண் பார்வையற்ற இசைக்கலைஞனின் பற்றிய கதை என்பதால் கண்ணை நம்பாதே என்பதே தலைப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.