வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (07:49 IST)

ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்த தந்தை-மகன் நடிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். மேலும் ஜனவரி மாதம் அவர் கட்சி தொடங்குவார் என்பதும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும் நிறுத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தற்போதுவரை ரஜினி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க திட்டம் இடமில்லை என்றும், அவரது கட்சியினர் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் ரஜினிகாந்த் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ரஜினியின் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதையடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவருக்கு ஆதரவாகவும் திரையுலக நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தமிழ் நடிகர்களான நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகிய இருவரும் ரஜினிக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் ரஜினி கட்சிக்காக தாங்கள் தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது