ஜிவி பிரகாஷ் படத்தை பார்த்து பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை பாராட்டி அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஜீவி பிரகாஷ் கவுதம் மேனன் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள செல்பி திரைப்படம் வரும் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
இந்த படத்தை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பாராட்டியுள்ளார். இந்த படம் கல்வித் துறையில் உள்ள ஊழல்களை வெளிப்படுத்தும் என்றும் நீட் தேர்வால் ஏற்படும் தற்கொலைகள் கொலைகள் குறித்து தைரியமாக பேசப்பட்டிருக்கிறது என்றும் ஜிவி பிரகாஷின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று செல்பி திரைப்படம் என்றும் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது