திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 1 பிப்ரவரி 2020 (11:47 IST)

குழந்தையுடன் காற்று வாங்கும் ஏமி ஜாக்சன் - இப்படியும் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமா!

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.
 
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்தது. 
 
குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் முன்பை போலவே வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 28 பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடிய அவர் தனது குழந்தையுடன் அட்டகாசமான போஸ் கொடுத்து இணயத்தை கலக்கி வருகிறார். ரெட் கலர் பிகினி உடையணிந்து குழந்தையுடன் அவர் கொடுத்துள்ள போஸ் செம்ம ட்ரெண்டாகி வருகிறது.