செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (11:09 IST)

என்னது சைக்கோ 2 வருமா? உதயநிதி பேச்சால் ரசிகர்கள் மெர்சல் !

சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பரவலான பாராட்டைப் பெற்று வரும் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் சிங்கம்புலி சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டுமென்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். அதையடுத்து பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘சைக்கோ இறந்ததைப் போல காமிக்கவில்லை. அவன் விழுந்தது போலதான் காமித்தார் மிஷ்கின். இன்னும் கமலாதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உயிரோடு இருக்கிறார்கள் அவர்களுக்காக கட்டாயம் சைக்கோ 2 எடுப்போம்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

சைக்கோ படம் பல்வேறு லாஜிக் ஓட்டைகளுக்காக சைக்கோ இரண்டாம் பாகமாவது லாஜிக் ஓட்டைகள் இல்லாமல் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.