வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (17:00 IST)

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த அமிதாப் பச்சன்

Amitabh bachan
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்  நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். இப்படம் வசூல் சாதனை படைத்தது.

இதையடுத்து,  நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் ’’ தலைவர் 170’’ என்ற  படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த  நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து  துஷாரா விஜயன், ரித்திகா சிங், பாகுபலி பட நடிகர் ராணா டகுபதி ஆகியோர் ‘தலைவர் 170’ படத்தில் இணைந்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில்,  இவர்களுடன் இணைந்து, பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதை லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படமும் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைக்கலாம் என கூறப்படுகிறது.