அமேசானின் ஆர்டர் செய்த நடிகை ஏமாற்றம்...பார்சலில் என்ன இருந்தது தெரியுமா...?
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவர் அமேசான் இணையதளத்தில் ரூ 18000 க்கு ஹெட்போன் ஆர்டர் செய்தார். பின்பு டெலிவெரி செய்யப்பட்ட பின் அதை ஆசையுடன் பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம்!ஹெட்போன் இருக்கும் என்று பார்த்தால அதில் துருப்பிடித்த ஆணி மற்றும் இரும்புகள் இருந்துள்ளன.இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
அமேசான் இணையத்தளத்தில் போஸ் ஹெட்போனை ஆர்டர் செய்தேன்.பிரிக்காமல் அழகாகவும் பிரிக்காமலும் மூடப்பட்டிருந்தது அப்பெட்டி.ஆனால் அது வெளியே மட்டும்தான்.உங்களூடைய வாடிக்கையாளர் சேவை மிகவும் மோசமாக உள்ளது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது அந்நிறுவனத்துக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன் நடிகை தேவயானியின் தம்பியும் பிரபல நடிகருமான நகுல்
பிளிப்கார்டில் ரூ.1.25 க்கு ஐபோன் ஆர்டர் செய்து அது போலியானதை தொடர்ந்து அந்நிறுவனம் அவருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.