வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 டிசம்பர் 2018 (20:11 IST)

ஸ்ட்ராமி டேனியல்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் தாம் பாலுறவு கொண்டதை வெளியில் தெரிவிக்காமல் இருக்க மிரட்டப்பட்டதாக கூறிய ஆபாச பட நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ் குற்றம் சாட்டினார். 
 
இவர் டிரம்ப் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், டிரம்ப் தரப்பின் சட்டச் செலவுகளில் சுமார் 75 சதவிகிதமான 2,93,052.33 டாலரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
முன்பின் தெரியாத ஒருவரால் ஒருவேளை தாம் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று டிரம்ப் தம்மைப் பகடி செய்ததாக ஸ்ராட்மி டேனியல்ஸ் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த உத்தரவு மேல்முறையீட்டில் நிலைக்காது என டேனியல்ஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.