திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (14:07 IST)

வட சென்னை படத்துல அல்லு அர்ஜுன் நடிக்க இருந்தாரா? எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் அமைந்த முக்கியமான படமாக வடசென்னை அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த வாத்தி பட விழாவில் இதுபற்றி நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஜூனியர் என் டி ஆர் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதுபற்றி இப்போது பேசியுள்ள வெற்றிமாறன் “முன்பே நான் அல்லு அர்ஜுனுடன் இணைந்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. வட சென்னை படத்தில் அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் தன்மை மாறியதால் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.