1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (07:44 IST)

காந்தாரா எஃபெக்ட் போல… ஃபுல் மேக்கப்பில் அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் போல சேலை அணிந்து மேக்கப் எல்லாம் போட்டு முரட்டு உருவமாக தோற்றமளிக்கிறார். சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்திலும் இதுபோன்ற போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.