குழந்தை நட்சத்திரமாகும் அல்லு அர்ஜுனின் மகள்!
நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இந்த படத்தில் இப்போது நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக நடிக்க உள்ளார். அவர் அல்லு குடும்பத்தைச் சேர்ந்த நான்காம் தலைமுறை நடிகராக உருவாகியுள்ளது குறித்து அல்லு அர்ஜுன் பெருமிதப்படுவதாகக் கூறியுள்ளார்.