1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (11:36 IST)

ராஜமாதா சிவகாமி தேவியாக சமந்தா...? எத்தனை கோடி பட்ஜெட் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா திறமையான நடிகையாக கைவசம் பல படங்களை வைத்துக்கொண்டு பிசியாக இருந்து வருகிறார். தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது பிரம்மாண்ட படமான பாகுபலி கதை வெப் தொடராக உருவாகவுள்ளது. இதில் நடிகை சமந்தா இளம் வயது ராஜாமதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டபொழுது அவர் அதை நிராகரித்துவிட்டாராம். அதனால் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 
இவர் மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் தொடர் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல்கள் கசிந்துள்ளது. பின்னாளில் சமந்தா வாய்ப்பை தவறவிட்டோம் என வருத்தப்படுவார் என கிசுகிக்கிறது திரை வட்டாரம்.