திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (16:22 IST)

அடேங்கப்பா... சமந்தாவுடன் கோல் அடிக்கும் நாய் - வீடியோ!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். 
 
அந்தவகையில் சமந்தா தற்போது  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதே போல் அவரது கணவர் நாக சைதன்யா அமீர்கானுடன் Laal Singh Chaddha என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா ஹதராபாத்தில் தன்  செல்ல நாயுடன் பலூன் விளையாடி சில்லவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.