திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (17:37 IST)

ரஜினியுடன் கூட்டணியா? பாஜக தலைவர் முருகன் தகவல்

இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், இன்று அவர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். அடுத்த 10 நாட்களில் அவர் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிடுவார் எனவும்,அதன்பிறகு கட்சியைப் பதிவு செய்யும் முன் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க அவர் ஆயத்தமாவார் எனவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ரஜினியை இயக்குவது பாஜக தான், அவரைக் கட்சி ஆரம்பிக்கச் சொல்லி பாஜகதான் நெருக்கடி கொடுத்தது எனப் பல விமர்சனங்கள் வெளியானது.

இந்நிலையில், பாஜக தமிழகத் தலைவர் முருகனிடம் இன்று செய்தியாளர்கள், ரஜினி கட்சி பாஜக கூட்டணியில் இணையுமா எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், பாஜக கூட்டணியில் ரஜினியின் புதிய கட்சி இணைவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் அரசியல் வருகையால் பாஜகவுக்குஎந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார்.