செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (15:23 IST)

பெண் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் ஆலியா பட்!

ஆலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கும் படத்தின் கதை நிஜமானப் பெண் ஒருவரின் வாழ்க்கையில் இருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மும்பையின் சிவப்பு விளக்க்கு பகுதியான   காமாட்டிபுராவில் மிகப்பெரிய கேங்ஸ்டர் பெண்ணாக திகழ்ந்து வந்தவர் கங்குபாய் கொத்தேவாலி. பாலியல் தொழிலில் விருப்பமின்றி நுழைக்கப்பட்டு பின்னர் அந்த தொழிலில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் கங்குபாய். அவரின் வாழ்க்கையை ஒட்டிதான் இப்போது சஞ்சய் லீலா பன்சாலி கங்குபாய் கதியாவாட்டி என்ற படத்தை எடுத்து வருகிறாராம். இதன் மையக் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிக்க உள்ளார்.