செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:21 IST)

8 மில்லியன் Dislike... ‘சடக் 2’ ட்ரைலர் மூலம் பழி தீர்த்த சுஷாந்த் ரசிகர்கள்!

சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் வாரிசு நடிகர்களின் அரசியல் முக்கிய காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

அதில், கரண் ஜோகர், ஆலியா பட், மகேஷ் பட், சோனம் கபூர், கரீனா கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்கள் நேரடியாக சுஷாந்த்தை புறக்கணித்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது தங்களது வெறுப்பை காட்ட ஆரம்பித்த சுஷாந்தின் ரசிகர்கள் அவரக்ளை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்வதை நிறுத்தினர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மகேஷ் பட் இயக்கத்தில் சஞ்சய் சத், சித்தார்த் ராய் கபூர், ஆதித்ய ராய் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'சடக் 2' படத்தின் ட்ரைலர் வெளியாகியது. வெளியான 12 மணி நேரத்தில் 1.5 மில்லியன் டிஸ்லைக்குகள் பதிவாகியத்தை அடுத்து தற்ப்போது 8 மில்லியன்
டிஸ்லைட்ஸ்களை கடந்து யூடியூபில் பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட வீடியோக்கள் லிஸ்டில் சதக் 2 ட்ரைலர் இடம்பெறுள்ளது. மேலும், பெரும்பாலானோர் இந்த ட்ரைலரை டிஸ்லைக் செய்வதற்கென்றே சர்ச் செய்து வருகின்றனர்.