வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (19:52 IST)

அஜித்துடன் தன்னை இணைத்த விவகாரம்: பிரபல ஊடகத்திற்கு அலிஷா அப்துல்லா கண்டனம்

பிரபல ஊடகத்திற்கு அலிஷா அப்துல்லா கண்டனம்
இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லாவுக்கு NHRACACB என்ற தேசிய மனித உரிமைகள் மற்றும் குற்ற எதிர்ப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் என்ற அமைப்பு தமிழக மாநிலத்தின் தலைவர் பதவியை அளித்தது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த பதவியை பெற்றவுடன் அவர் நேராக அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரது காலில் விழுந்து வணங்கி ‘உங்களால் தான் இந்த பதவி தனக்கு கிடைத்தது என்றும், அதனால் நன்றி என்றும் கூறியதாக முன்னணி ஊடகம் ஒன்று வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தது. இந்த வீடியோவில் பேசியவர் ஒரு நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஊடகத்திற்கு அலிஷா அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அஜித் போன்ற பெரிய நடிகரை அவதிக்கும் வகையிலும் தன்னையும் அவதூறாக விமர்சனம் செய்ததற்கும் தனது கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் அலிஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
பெண் பைக் ரேஸ் சாம்பியன் அலிஷா அப்துல்லா அவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த அதர்வா நடித்த ‘இரும்பு குதிரைகள்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.