1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2022 (17:18 IST)

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

al vijay mother
இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தாயார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
பிரபல இயக்குனர் விஜய்யின் தாயார் வள்ளியம்மை இன்று காலை காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
அஜித் நடித்த கிரீடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தாண்டவம், தெய்வத்திருமகள் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஏ.எல்.அழகப்பனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜய்யின் தாயாரும், அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார் 
 
இதனையடுத்து அவருடைய இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.