திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (11:24 IST)

துப்பாக்கி படத்தில் நடித்ததாக வருத்தப்படுகிறேன் – நடிகை ஓபன் டாக்!

நடிகை அக்‌ஷரா கவுடா துப்பாக்கி படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்துக்காக வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் அக்‌ஷரா கவுடா. மேலும் இவர் உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது  இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்தது தனக்கு இப்போது வருத்தத்தை அளிப்பதாக சொல்லியுள்ளார்.

துப்பாக்கி படத்தில் ஆபாசப் படங்களில் நடித்த ஒரு பெண்ணாக நடித்திருந்தார் அக்‌ஷரா கவுடா. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது காஜலுக்கு தோழியாக நடிக்கதான் தன்னை அழைத்ததாகவும், அந்த படத்தில் நடித்தது குறித்து தான் இப்போது வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் நடித்ததன் மூலம் விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது மட்டுமே ஒரே நல்லது எனக் கூறியுள்ளார்.