காஞ்சனா 2' இந்தி ரீமேக்கில் அக்சயகுமார்?
அக்சயகுமார் நடித்த 'பேபி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்சயகுமார் தமிழ் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த படம் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 2. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அக்சயகுமார் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் வெகுவிரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.