செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (11:26 IST)

என்ன ஃபேன்மேட் போஸ்டர் மாதிரி இருக்கு… கலவையான விமர்சனங்களை சந்திக்கும் ‘விடாமுயற்சி’ முதல் லுக்!

அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு அஜித், திரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் மகிழ் திருமேனி. அஜித் தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ள நிலையில் அங்கு மேலும் சில நாட்கள் ஷூட் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு விடாமுயற்சி படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் போஸ்டர் மிகவும் எளிமையாக ஒரு படத்தின் முதல் லுக் போஸ்டர் போல இல்லாமல் ஃபேன் மேட் போஸ்டர் போல இருப்பதாக கலவையான விமர்சனங்களும் வெளிவருகின்றன. ஆனால் வராது வந்த மாமணியாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் வந்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.