வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (08:22 IST)

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமாகி வரும் நிலையில் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் கட்ட ஷூட் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் “god bless u mame’ என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. அந்த வார்த்தை ட்ரண்ட் ஆன நிலையில் இப்போது அதற்கான அர்த்தம் என்ன என்பது தெரியவந்துள்ளது. படத்தில் இடம்பெறும் அஜித்தின் அறிமுகப் பாடலின் தொடக்க வரிகள்தான் அவை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில்தான் அந்த பாடல் காட்சியை படமாக்கி முடித்ததாக சொல்லப்படுகிறது.