திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (08:39 IST)

அனிருத் குரலில் அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல்… ஜிப்ரான் கொடுத்த அப்டேட்!

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து நேற்று அஜித் டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்நிலையில் இப்போது துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து விரைவில் அந்த பாடல் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வாரிசு முதல் சிங்கிள் அப்டேட் வெளியான நிலையில் இப்போது துணிவு சிங்கிள் அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.