வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:48 IST)

அஜித்தின் துணிவு படத்தின் ப்ரோமோ பாடல் அப்டேட்!

அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதாம். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் மூன்று மாதங்களுக்குள் முடிந்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்நிலையில் துணிவு படத்தில் ப்ரோமோ பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான ஷூட்டிங் விரைவில் நடக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.