அஜித்தின் ''துணிவு ''பட அப்டேட் அடுத்தவாரம் - ஜான்வி கபூர் டிவீட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் அப்டேட் பற்றி போனி கபூரின் மகள் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். இவர், நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்தப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், துணிவு படத்தின் அடுத்த அப்டேட் அடுத்த வாரம் நிச்சயமாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Sinoj