திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (09:26 IST)

2 வருடம் சினிமாவுக்கு குட்பை… விக்னேஷ் சிவன் படம் முடிந்ததும் உலகம் முழுவதும் சுற்ற உள்ள அஜித்!

அஜித் சமீபகாலமாக அதிகளவில் பயணம் செய்து வருகிறார். இது சம்மந்தமான அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அஜித்தின் 61 ஆவது படமான துணிவு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துள்ளது. தாய்லாந்து படப்பிடிப்பை முடித்து வந்த படக்குழு தற்போது சென்னையில் சில பேட்ச் காட்சிகளை படமாக்கி வருகிறது. துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அஜித் தனது 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் அஜித் சுமார் 2 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த இரண்டு வருடத்தில் அவர் உலகம் முழுவதும் தனது இரு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளாராம். சமீபகாலமாகவே அஜித் அதிகளவு பயணங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.