1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:25 IST)

இதுவரை நேருக்கு நேர் மோதிக்கொண்ட அஜித்- விஜய் படங்கள்!

அஜித் விஜய் இருவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ளது.

விஜய் நடித்த வாரிசு ஜனவரி 13ம் தேதியும் அஜித் நடித்த துணிவு ஜனவரி 12-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்த வீரம் மற்றும் விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் திருநாளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுவரை விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்ப்போம்.
  • 2001 ஆம் ஆண்டு பொங்கலில் விஜய்யின் ப்ரண்ட்ஸ் திரைப்படமும், அஜித்தின் தீனா திரைப்படமும் வெளியானது.
  • 2003 ஆம் ஆண்டு விஜய்யின் திருமலை திரைப்படமும், அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் ரிலீஸானது.
  • 2006 ஆம் ஆண்டு அஜித்தின் பரமசிவன் மற்றும் விஜய்யின் ஆதி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
  • 2007 ஆம் ஆண்டு விஜய்யின் போக்கிரி மற்றும் அஜித்தின் ஆழ்வார் ஆகிய படங்கள் வெளியாகின.
  • 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம்
  • 2022 ஆம் ஆண்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு