திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (18:28 IST)

'துணிவு’ படத்திற்கு புரமோஷனா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் பிஆர்ஓ

ajith
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துகொள்வார் என்றும் இதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது
 
 இதுவரை தான் நடித்த எந்த படத்திற்கும் அஜித் புரமோஷன் செய்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் துணிவு படத்திற்கு மட்டும் அவர் செய்ய ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் அஜீத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரு நல்ல திரைப்படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்றும் அந்த படம் தானாகவே புரமோஷன் செய்து கொள்ளும் என்றும் பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து அஜீத் ‘துணிவு’ படத்திற்கு புரமோஷன் செய்ய வரமாட்டார் என்பதையே அவர் மறைமுகமாக வதந்திக்கு. வைக்கும் வகையில் கூறியுள்ளார் என்று கருதப்படுகிறது.
 
Edited by Mahendran