திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (17:25 IST)

''துணிவு''பட ப்ரீ ரிலீஸில் கலந்து கொள்வாரா அஜித்?

Thunivu
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படத்தின் ப்ரீ ரிலீஸுல் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் படத்தின் தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இப்போதெல்லாம், ஒரு படடத்திற்கு அதிக பப்ளிசிட்டி மற்றும் புரமோஷன் பணிகள் மேற்கொள்வது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்ம் மாலிவுட் என அனைத்து வுட்களிலும் வழக்கமாகிவிட்டதால், கோலிவுட்டில் அது பிரதிபலிக்கிறது.

சமீபத்தில், சூப்பர் ஹிட் அடித்து வசூல் குடித்து, விக்ரம், பொ.செ-1 ஆகிய படங்கள் மக்களிடன் வரவேற்பை பெற புரமோசனும் முக்கிய காரணம். இதில், நடித்த அனைத்து நடிகர்களும் கலைஞர்களும் இதைச் சிறப்பாக செய்தனர்.

இந்த நிலையில், அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியுள்ளதால், இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸில்  நடிகர் அஜித்குமார் கலந்துகொள்ள வேண்டுமென அவரிடம் ஹெச்.வினோத் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அசல் படத்திற்குப் பின் எந்த விளம்பரம், டிவி  நிகழ்ச்சி, பேட்டிகளில் கலந்துகொள்ளாத அஜித், துணிவு ப்ரீ ரிலிஸில் கலந்துகொண்டால், இந்த    நிகழ்ச்சி  நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடக்கும் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj