வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

அஜித் ஒரு கடின உழைப்பாளி. சர்டிபிகேட் தரும் ராஜ்கிரண்

ராஜ்கிரண் நடிப்பில் தனுஷ் இயக்கத்தில் வரும் 14ஆம் தேதி 'பவர் பாண்டி' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.



 


இந்த நிலையில் ராஜ்கிரண், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது 'கிரீடம்' படத்தில் நடித்தபோது அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ராஜ்கிரண் கூறியபோது, 'அஜித் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை. அந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அவர் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டார். அப்படி இருந்தும் தன்னால் தயாரிப்பாளர் ஒரு சிறு நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வலியையும் பொறுத்துக்கொண்டு நடித்தார்' என்று நினைவு கூர்ந்தார்

அதேபோல் அஜித், சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று பேதம் பார்க்க மாட்டார் என்றும், அனைவருக்கும் சம மதிப்பு கொடுப்பவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்