1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:39 IST)

கஜா புயல் நிவாரணமாக அஜித் கொடுத்து ரூ.5 கோடியா? வைரல் வீடியோ

கஜா புயல் பாதிப்புகளுக்காக தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு  நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியதாக தமிழக அரசு  வெளியிட்ட  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 
அஜித்-ன் இந்த உதவியை பலரும் பாராட்டினார்கள். ஆனால் தற்போது, சேலத்தைச் சேர்ந்த அஜித்-ன் தீவிர ரசிகரும், விநியோகஸ்தருமான 7ஜி சிவா, அஜித், கஜா நிவாரணத்துக்காக ரூ.15 லட்சம் கொடுக்கவில்லை, 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என்று  பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
 
அந்த ட்விட்டர் வீடியோவில் சிவா, ``யாருக்குமே தெரியாது, 15 லட்சம் கொடுத்ததாக சொல்வார்கள். 15 லட்சம் கிடையாது, 5 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். நான் அவருடன் பெர்சனலா பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். அவரது கேரக்டர் எனக்குத் தெரியும். அவர் தான் செய்த உதவிகளை வெளியே சொல்லமாட்டார். உதவி செய்வதை வெளிப்படையாக தெரிவிக்கமாட்டார்’’ என்று பேசியுள்ளார். 
 
இதுகுறித்து நடிகர் அஜித் தரப்பு  இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் ``அஜித் செய்யும் நன்கொடைகள் குறித்த தகவல்கள் அனைத்துமே செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்டவர்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால், இத்தகைய போலியான தகவல்களை, அதுவும் மிகவும் உணர்வுபூர்வமான விஷயத்தில் இணையதளம் வாயிலாக பரப்புவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது’’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வீடியோ லிங்க்