1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (20:17 IST)

விஸ்வாசம்: "செண்டிமெண்ட் தல " மனம் திறந்த சிவா!

விஸ்வாசம்  படம்  ஒரு ஜாலியான மற்றும் எமோஷனலான திருவிழாப் படம்,  மனம் திறந்தார் இயக்குனர் சிவா.
 
 
தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரல் ஆகியது.
 
விஸ்வாசம் படத்தில் ஒரு குத்துப்பாட்டு உள்ளதாக சமீபத்தில் இப்படத்தின் நடன இயக்குனர் கூறியுள்ளார். இப்படம் அஜித்தை வைத்து சிவா இயக்கும் நான்காவது படமாகும். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
 
தேனி மாவட்டத்துல கொடுவிலார்பட்டி கிராமத்துல நடக்கிற கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழற மனுஷங்களோட உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’ ” 
 
சிவா படம் என்றாலே சென்டிமெண்ட் கட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது, வீரம் படத்தில் தம்பியின் சென்டிமென்ட், வேதாளம் படத்தில் தங்கையின் சென்டிமென்ட், விவேகம் படத்தில் மனைவி சென்டிமென்ட் வைத்துள்ளார்.ஆனால் விஸ்வாசம் படத்தில் இந்த 3 சென்டிமென்ட் உடன் சேர்த்து குடும்ப சென்டிமென்ட் உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.