திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (19:31 IST)

வலிமை பற்றி முதல்முறையாக பேசியுள்ள அஜித்தின் சகோதரர்!

நடிகர் அஜித்தின் சகோதரர் அனில்குமார் வலிமை படத்தை பற்றி தன்னிடம் கேட்கப்படும் அப்டேட் குறித்து சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் நாளை வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களின் வசூல் சாதனைகளைக் கண்டிப்பாக வலிமை முறியடிக்கும் என பேசப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் சகோதரரான அனில்குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வலிமை பற்றி தன்னிடம் கேட்கப்படும் கேள்விகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ’இத்தனை நாட்களாக என்னிடம் ஆர்வமாகக் கேட்கப்பட்ட வலிமை அப்டேட்களால் நான் எரிச்சலடைந்தேன். நான் ஒன்றை இப்போது ஒத்துக்கொள்ள வேண்டும். நான் என்னுடைய வாழ்க்கையில் பாதியை வாழ்ந்துவிட்டேன். ஆனால் நானும் உங்களைப் போலவே அதே ஆர்வத்தோடு முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.