செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (18:51 IST)

’வலிமை’ படத்தின் கடைசி புரமோ: அஜித் ரசிகர்கள் குஷி!

’வலிமை’ படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் போனிகபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வலிமை’ படத்தின் கடைசிப் வீடியோவை வெளியிட்டுள்ளார்
 
ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோ ஏற்கனவே வெளியான சில காட்சிகளும் வெளியாகாத சில காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வீடியோவும் வழக்கம்போல் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் பைக் சேசிங் காட்சிகள் ஆகியவை உள்ளன என்பதும் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்று கூறப்பட்டது
 
 தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்