புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (15:30 IST)

முதல்முறையாக 1000 திரையரங்குகளில் ‘வலிமை’: மாயாஜாலில் மட்டும் எத்தனை தெரியுமா?

முதல் முறையாக ‘வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் மதுரை சென்னை கோவை உள்பட பெருநகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ‘வலிமை’ திரைப்படம்தான் திரையிடப்பட உள்ளது
 
 சென்னையில் 16 ஸ்கிரீன்கள் கொண்ட மாயாஜாலில் அனைத்து திரையரங்குகளிலும் ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருப்பதாகவும் முதல் நாளில் மட்டும் 70 காட்சிகள் மாயாஜாலில் வெளியிடுவதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ் திரையுலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.