புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (10:31 IST)

இது குடும்பம் இல்ல விக்ரமன் சார் படம்… பிரேம்ஜியை சினிமாவுக்கு அழைத்துப் போக கங்கை அமரன்!

இயக்குனர் வெங்கட்பிரபு வலிமை படத்துக்கான முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டை வாங்கி விட்டதாகக் கூறியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் நாளை வெளியாக வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக திரையரங்குகள் போர்ட் வைத்தன.

இதனால் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையில் இயக்குனரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான வெங்கட்பிரபு வலிமை படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்கிவிட்டதாக டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதற்கு கமெண்ட் செய்த அவரின் தம்பி பிரேம்ஜி அமரன் ‘எனக்கும் சேத்து எடுத்திருக்கிறாயா?’ எனக் கேட்டிருந்தார். இதைப் பார்த்த இருவரின் அப்பாவான கங்கை அமரன் சிறுகுழந்தையிடம் சொல்வது போல ‘பிரபு பிரேமயும் கூட்டிட்டுப் போ’ எனக் கூறியிருந்தார். இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்கள் பகிரப்பட்டு இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.