அஜித் 62 படத்துக்காக 3 தலைப்புகளை உருவாக்கிய மகிழ் திருமேனி!
அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் முன் தயாரிப்பு வேலைகளை இப்போது மகிழ் திருமேனி விறுவிறுப்பாக செய்துவரும் நிலையில் மார்ச் இரண்டாம் வாரத்தில் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் நேற்று அஜித் 62 படத்துக்கான அலுவலக பூஜை எளிமையாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்துக்கான மூன்று தலைப்புகளை மகிழ் திருமேனி தேர்வு செய்துள்ளதாகவும், அவற்றில் ஒன்றை தேர்வு செய்து விரைவில் அப்டேட் வெளியிடப்படும் எனவும் சொல்லப்படுகிறது. முதல் லுக் போஸ்டரிலேயே படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு விடும் என்றும் சொல்லப்படுகிறது.