1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (08:28 IST)

எல்லாவற்றிலும் உன்னை தேடுகிறேன் அம்மா… ஜான்வி கபூர் உருக்கம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவுநாளை முன்னிட்டு அவரின் மகள் ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவியின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் “இப்போது எங்கேயும் உன்னையே பார்க்கிறேன் அம்மா. நான் செய்வது அனைத்தும் உன்னைப் பெருமைப் படுத்தும் என நினைக்கிறேன். நான் எங்கே சென்றாலும், எதை செய்தாலும் அவை அனைத்தும் உன்னிடமே என்னை இட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார்.